May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

வாரிசு அரசியலை எதிர்த்தவர் எம்ஜிஆர்: பிரதமர் மோடி பேச்சு

1 min read

MGR who opposed succession politics: PM Modi’s speech

27.2.2024
‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
பல ஆண்டுகளாக தமிழகத்தை கொள்ளை அடித்தவர்கள், பா.ஜ.க. வின் வளர்ச்சியை பார்த்து பயப்படுகிறார்கள். தமிழக மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள். மத்திய பா.ஜ.க, அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. தமிழகத்திற்கு 3 மடங்கு நிதியை மத்திய பா.ஜ.க, அரசு வழங்கியுள்ளது. மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு திமுக எதுவும் செய்யவில்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெரிய அமைச்சரவைகளில் அமைச்சர்களாக இருந்தபோதும் திமுக எதுவும் செய்யவில்லை. தமிழகத்திற்கு 10 ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக – காங்கிரஸ் கூட்டணி செய்ததை விட பல மடங்கு பா.ஜ.க, அரசு செய்துள்ளது. மோடி, அனைவருக்காகவும் பணியாற்றுகிறார்; ஏழைகளுக்காக பணியாற்றுகிறார்; தமிழகத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றுகிறார். இதுவே இந்த மோடியின் உத்தரவாதம். மோடியின் உத்தரவாதம் இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர இருக்கிறது.

நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள சிலர் பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்கின்றனர். இன்று தமிழகம் வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர் எம்ஜிஆர். அதனால் அவர் இன்றும் நினைத்து பார்க்கப்படுகிறார். அவரை போலவே ஜெயலலிதாவும் மக்கள் மனதில் நிலைப்பெற்றிருந்தார். எம்ஜிஆர் குடும்பத்திற்காக உழைத்தவர் அல்ல, மக்கள் நலனுக்காக பணியாற்றியவர்
ஜெயலலிதா தமிழக மக்களோடு எந்த வகை தொடர்பு வைத்திருந்தார் என்பது எனக்கு தெரியும். தமிழகத்தில் திமுக. வால் அரசியல் இழுக்கு ஏற்பட்டுள்ளது. வாரிசு அரசியலை எதிர்த்தவர் எம்ஜிஆர். அவரை அவமதிப்பது போல், திமுக ஆட்சி நடைபெறுகிறது. நாடு வளர்ச்சி அடையும் போது தமிழகமும் அதே வேகத்தில் வளர்ச்சி அடையும். 2 பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையங்களில், ஒன்று தமிழகத்திற்கு வருகிறது.
‘இண்டியா’ கூட்டணி தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படுவதற்கான பணிகளை செய்ய மாட்டார்கள். இண்டியா கூட்டணியின் ஒரே நோக்கம், மோடியை வெறுப்பதே! குடும்ப ஆட்சியை எப்படி நடத்துவது என்பது பற்றியே சிந்திக்கிறார்கள். இண்டியா கூட்டணி தமிழகத்தில் வெற்றிப்பெற்றால் தமிழகத்தை வளர்ச்சியடைய அனுமதிக்க மாட்டார்கள். இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் இனிமேல் தேசத்தை சுரண்ட முடியாது.
முத்ரா கடன் வசதி திட்டம் மூலம் தமிழகத்திற்கு 2 லட்சம் கோடி கடனாக வழங்கப்ப்டடுள்ளது. மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றுகிறார். தமழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. பா.ஜ.க, தன்னுடைய 3வது ஆட்சி காலத்தில் வளர்ச்சியடைந்த இந்தியாவை இலக்காக கொண்டு பணியாற்ற உள்ளது.
தமிழகத்தை ஆளுகின்ற கட்சி, தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை தடுக்கிறது. இண்டியா கூட்டணி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டது. 2024ல் ஊழல் கட்சிகளின் ஆட்சிக்கு பூட்டுப்போட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். நீங்கள் தமிழகத்தின் பிரகாசமான வளர்ச்சிக்கு உத்தரவாதத்தை கொண்டு வந்துள்ளீர்கள். தமிழகத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் முடிவெடுத்து விட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.