May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

ரெயில்கட்டணம் குறைப்பு- பயணிகள் மகிழ்ச்சி

1 min read

Rail Fare Reduction – Passengers Delight

28/2/2024
பயணிகள் ரயில்களில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பாசஞ்சர் ரெயில்களில் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொது போக்குவரத்தில் முக்கியஸஇடம்பிடித்துள்ள ரெயில்களில், பயணிகள் ரெயில்கள் ஏழை, எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் பயணிக்க வசதியாக இருந்து வருகிறது. டந்த 2019-ம் ஆண்டு கொரோனா லைாஸ் காரணமாக உலக நாடுகள் பலவும் பாதிப்புகளை எதிர்கொண்டது. நமது நாட்டில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதில் ரெயில் போக்குவரத்தும் அடி போடு நிறுத்தப்பட்டது. கொரோனா அச்சுறுத் தல் குறைந்த பிறகு படிப்ப டியாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

அப்போது சாதாரண பயணிகள் ரெயில்கள் அனைத்தும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் என்று பெயர் மாற்றம் செய்து இயக்கப்பட்டன. மேலும் அவற்றுக்கு இரும் டங்கு கட்டணா உயர்வும் கொண்டு வரப்பட்டது.

இருந்த போதிலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை அடிப்ப டையில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணித்தனர். இந்த நிலை மில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாசஞ்சர் ரெயில்களில் மட்டும் கட்டணம் குறைக்கப்பட்டு, நேற்று முதல் பழைய கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.

அதன்படி நெல்லையில் இருந்து செங்கோட்டை ட்டைக்கு நேற்று முன்தினம் முன் வார கட்டணம் ரூ,45-ஆக இருந்தது. ஆனால் நேற்று முதல் கட்டணம் ரூ.20-ஆக குறைக்கப்பட்டது.

நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு ரூ.40-ல் இருந்த கட்டணம் ரூ.20-ஆக குறைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் நெல்லை-நாகர்கோவில், நெல்லை வாஞ்சிமணியாச்சி தூத் துக்குடி உள்ளிட்ட வழிதடங்களில் செல்லும் ரெயில்களிலும் |கட்டணம் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தூரத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது 200 கிலோ மீட்டர் தூரத்துக்குள் இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்களுக்கு மட்டும் பொருந்தும்.

நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட பயணிகள் ரெயில் கட்டணம் குறைக்கப்பட்டு இருந்த போதிலும் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. அதாவது, நெல்லை மேலப்பாளையம் இரட்டை ரெயில் பாதை தண்டவாளம் இணைப்பு பணிகள் நடப்பதால், நெல்லை- திருச் செந்தூர் இடையேயும், நெல்லை செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் சில ரெயில்கள் சேரன்மாதேவி முதல் செங்கோட்டை வரை பட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதில் செல்லும் பயணிகள் மட்டும் இந்த கட்டண குறைப்பு சலுகையை பயன்படுத்தினார்கள். 1ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நெல்லை பகுதியில் அனைத்து ரெயில் போ போக்குவரத்தும் சீராகி விடும், அப்போது இந்த கட்டண குறைப்பு சலுகையை பயன்படுத் முழுமையாக பயணிகள் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .இருந்த போதிலும் பயணிகள் ரெயில்களில் கட்டணம் குறைக் ப்பட்டு இருப்பதால் பணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.