குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் கொண்டு வர காரணம்
1 min readWhat is the reason for bringing a rocket launch pad in Kulasekharapatnam?
29.2.2024
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவிற்கான காரணம் தெரியவந்துள்ளது.
இஸ்ரோவுக்கு, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் ‘சதீஷ் தவான்’ விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் உள்ளது. பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்கள் உதவியுடன் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன. நாட்டின் 2வது ஏவுதளம் அமைக்க, தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரபட்டினத்தில், 2,233 ஏக்கரில் இஸ்ரோ இடம் தேர்வு செய்யப்பட்டது.
ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்க வேண்டும். ஏவப்படும் விண்கலம் தென்துருவத்தை நோக்கி, கிழக்குக் கடற்கரைக்கு அருகில் இருக்க வேண்டும். ஏவுகலத்திலிருந்து பிரிந்து விழும் பாகங்கள் கடலில் விழ வேண்டும்.
பூமியின் சுழல் வேகம் 0.5 கி.மீ.,/ நொடி கூடுதலாகக் கிடைக்கும். இதனால், அதிக எடை கொண்ட விண்கலங்களை அனுப்ப முடியும்.
காற்றின் வேகம் 30 கி.மீ.,க்குள் இருக்க வேண்டும்.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாக இருக்க வேண்டும்.
புயல், மின்னல், மழையின் தாக்கம் குறைவாக இருக்க வேண்டும்.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்களின் பாகங்கள், இலங்கையில் மக்கள் வசிப்பிடத்தில் விழாமல் இருக்க, ‘Dogleg Maneuver’ என்ற முறையில் வளைந்து செல்லும் படி அனுப்பப்படுகிறது. இதனால், எரிபொருள் செலவு கூடுகிறது.
பூமத்திய ரேகையில் இருந்து 13.72 டிகிரி வடக்கில் ஸ்ரீஹரிக்கோட்டா உள்ளது.
குலசேகர பட்டினம் 8.36 டிகிரி வடக்கில் உள்ளது . இதனால், இங்கிருந்து ராக்கெட்களை ஏவினால் எரிபொருள் செலவு குறையும்.
ராக்கெட்டின் வேகத்தையும் அதிகரிக்க முடியும்.
குலசேகரபட்டின ஏவுதளம் அருகில், ‘விண்வெளி தொழில் பூங்கா’ தொடங்கத் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.