July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 33 மாதங்களாக போதைபொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது-அண்ணாமலை குற்றச்சாட்டு

1 min read

Drug traffic has increased in Tamil Nadu for 33 months – Annamalai alleges

1.3.2024
பாராளுமன்றத் தேர்தலையொட்டி தமிழக பா.ஜக., தலைவர் அண்ணாமலை ‛‛என் மண் , என் மக்கள் என் பாதயாத்திரையை மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்தாண்டு ஜூலை 28 ம் தேதி துவக்கி வைத்தார். இதன் நிறைவு நாளையொட்டி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற விழாவில் மோடி கலந்துகொண்டார். இந்நிலையில் பாத யாத்திரை முடிந்த உடன் தாடியை கிளீன் ஷேவ் செய்தார்.பின் வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது;
கடந்த 10 நாட்களாக ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக தி.மு.க., ஆட்சியில் கஞ்சா, சிந்தடிக் டிரக்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பொதுவெளியில் சர்வ சாதாரணமாக கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதனை எனது என் மண், என் மக்கள் பாதயாத்திரையின் போது தாய்மார்கள் என்னிடம் புகாராக தெரிவித்தனர். பட்டி,தொட்டியெல்லாம் கிராமத்திலும் பரவிவிட்டதால் இதனை பெரும் முயற்சி எடுத்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கூறினர். கடந்த 33 மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு டிரக்ஸ் புழக்கம் தமிழகத்தில் அதிகமாகி விட்டது.இந்த போதை பொருள், அரசியல், சினிமா ஆகிய தொடர்புகளை தாண்டி வெளிநாட்டு தொடர்புகள் மூலம் பரவியுள்ளது.
தி.மு.க.வைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் அயலக அணி பொறுப்பாளராக இருந்தார். அதே ஜாபர் சாதிக் ஒரு சினிமா நிறுவனம் நடத்தி கொண்டு பெரிய டிரக்ஸ் நெட் வொர்க் நிறுவன கும்பல் தலைவராக இருந்தார். சமீபத்தில் டில்லி போலீசாரும், நார்கோ டிரக்ஸ் கண்ட்ரோல் போலீசாரும் இணைந்து 3500 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர். இதில் முக்கிய நபராக ஜாபர் சாதிக்கை தேடி வருகின்றனர்.
45 கன்சைன்ட்மென்டில் உலர் தேங்காயில் வைத்து இயற்கையாக கிடைக்க கூடிய சிந்தடிக் டிரக்சை வைத்து அனுப்புகிறார்கள். மிகவும் தீங்கு விளைவிக்க கூடிய சூடோ எபிட் என்ற சிந்தடிக் டிரக்ஸை பயன்படுத்தி உலகத்தில் அதிகவிலை இருக்க கூடிய மெட்டா ஆம்பிடமைன் என்ற பொருளை உற்பத்தி செய்கிறார்கள். இதன் மதிப்பு ரூ. 1500 கோடி ஆகும்.
இப்படிஒரு நெட் வெர்க்கை இந்தியாவில் தமிழகத்தில் தி.மு.க, அயலக அணியில் உள்ள குறிப்பாக சினிமா துறையில் உள்ள ஜாபர் சாதிக் தி.மு.க., குடும்பத்தினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். முதல்வர் குடும்பத்தினர் ஜாபர் சாதிக் பாடல் வெளியிட்டு விழாவில் பங்கேற்கின்றனர். அயல் அணி என்ற பொறுப்பை பயன்படுத்தி இது போன்ற நெட்வொர்க்கை பயன்படுத்தி போதை பொருளை அனுப்புகின்றனர்.
இந்த ஜாபர் சாதிக் காவல்துறை டி.ஜி.பி. கையால் விருது வாங்குகிறார். இவரை எந்த போலீசார் கைது செய்வார்கள். சென்னை நுங்கம்பாக்கத்தில் கூரியர் நிறுவனத்தில் நார்கோ டிரக்ஸ் போலீசார் ரெய்டு நடத்தியுள்ளனர். இதையெல்லாம் அரசு கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் இல்லை. இதற்கு ஒரே தீர்வாக அரசியல் ரீதியாக பா.ஜ., கட்சி தான், பிரதமர் மோடி உள்ளார். என்.சி.பி.யை உஷார் படுத்தியுள்ளோம். போதை பொருளை பறிமுதல் செய்தது மத்திய அரசு, மத்திய அரசின் நிறுவனம். எனவே நம்முடைய வீட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முடைய பொறுப்பு. இதனை அரசியல் ரீதியாக பா.ஜ., முன்னெடுக்கிறது. ஒரு தனி மனிதாக நீங்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வீடியோ பதிவு. எல்லா பக்கங்களிலும் போதை பொருள் ஊடுருவி விட்டதால் தினசரி பேப்பரை படித்தால், எப்படி எப்படியெல்லாம் கடத்துகின்றனர் என்பதை முன்னாள் போலீஸ் அதிகாரியாக என்னால் கண்டுபிடிக்க முடிகிறது.
எனவே நாம் அனைவரும் இணைந்து களத்தில் இறங்கிய வேண்டிய நேரம் இது. நாம் இந்த போதை பொருளை ஒழிக்க வேண்டும். கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பல ஆண்டுகள் மாணவர்களாக படித்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும். இதனை மாநில அரசு செய்யாமல் செயல் இழந்துவிட்டது. இதிலிருந்து நம் தமிழகத்தை மீட்டெடுப்போம். வரும் காலத்தில் பா.ஜ.க, முழுமையாக உங்களோடு தமிழகம் முழுதும் களமிறங்கி பணியாற்றும். இப்பிரச்னைக்கு ஒருதீர்வை காண்போம் வணக்கம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.