சேந்தமரம்: பெண்ணை அடித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
1 min readLife sentence for beating woman to death
1.3.2024
தென்காசி மாவட்டம்
சேர்ந்தமரம் அருகே பொது தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்ப்பட்ட தகராறில் பெண்ணை கட்டையால் அடித்துக் கொலை செய்தவருக்கு நெல்லை நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம்
சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அந்தோணி வியாகம்மாள் என்பவரை அதே பகுதியை சேர்ந்த பாத்திமாராஜ் என்பவர் தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக பாத்திமாராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று வழக்கை விசாரணை செய்த நீதிபதி விஜயக்குமார் குற்றவாளியான சேர்ந்தமரம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த அந்தோணி ராயப்பன் என்பவரின் மகன் பாத்திமாராஜ் (வயது49), என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் திறம்பட செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த காவல்துறை யினருக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார்.