ஆய்க்குடி: இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் திருட்டு 3 பேர் கைது
1 min readTenkasi: 3 people arrested for theft in Indian Medical Association building
1/3/2024
தென்காசி மாவட்டம்
ஆய்க்குடி பகுதியில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் காவலாளி வெளியே சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கலையரங்கத்தில் இருந்த லேப்டாப் மற்றும் ஆம்ப்ளிபையர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஆய்க்குடி இந்திய மருத்துவ சங்கத்தின் மேலாளர் இதுபற்றி ஆய்க்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதன்படி ஆய்க்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் மேற்படி திருட்டில் ஈடுபட்ட தென்காசி அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 35), அகரக்கட்டு பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவரின் மகன் அந்தோணி நிக்ஸன் ஜெயபால்(வயது 34) மற்றும் லூர்து என்பவரின் மகன் லூர்து அந்தோணி ராஜ் (வயது 30) ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட லேப்டாப் மற்றும் ஆம்ப்ளிபையர் பறிமுதல் செய்யப்பட்டது.