July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தி.மு.க. வாக்கு குறைந்தால்.. நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

1 min read

DMK M. K. Stalin’s warning to the administrators if the vote is low

20.3.2024
நாடாளுமன்ற தேர்தல் களம் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தி.மு.க. இன்று தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள், தி.மு.க. அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்ட செயலாளர்கள், முக்கியமான மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அதற்கு பொறுப்பானவர்கள் பதில் சொல்ல வேண்டும். வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அரவணைத்து அழைத்து சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். கூடுதல் வாக்கு பெறும் பொறுப்பு மாவட்ட பொறுப்பு அமைச்சர்களையும், மாவட்டச் செயலாளர்களையும் சாரும்.

ஒரு எம்.எல்.ஏ. தொகுதியில் வாக்கு குறைந்தாலும் மாவட்டச் செயலாளரும், பொறுப்பு அமைச்சருமே பொறுப்பு. தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் தோளோடு தோளாக நீண்டகாலமா கொள்கை உணர்வுடன் பயணிக்கிறார்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம். தமிழ்நாட்டோட நலன் முக்கியம் என்று வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்க வேண்டும்.
இந்தியா கூட்டணி பெறப்போகும் வெற்றி சமூகநீதிக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான கருத்தியல்களை விதைக்கலாம் என்ற எண்ணம் பா.ஜ.க.வுக்கு கனவிலும் வரக்கூடாது. புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெற போகிறோம் என்பதை உறுதி செய்யவேண்டும். ஜூன் 4-ம் தேதி வெற்றி என்ற செய்தியோடு வந்து என்னை சந்தியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.