June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

பா.ஜ.க.: அண்ணாமலை, தமிழிசை, நயினார் நாகேந்திரன் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

1 min read

BJP: Announcement of constituencies contested by Annamalai, Tamilisai, Nayanar Nagendran

21.3.2024
தமிழகத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுடன் ஏறத்தாழ தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில், பா.ம.க 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகள், டி.டி.வி தினகரனுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் தாமரை சின்னத்திலேயே போட்டியிட உள்ளன. அந்த வகையில், 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளன. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட நிலையில், வேட்பாளர் பட்டியல் எப்போது வேண்டுமனாலும் வெளியாகும் என்று அண்ணாமலை இன்று கூறியிருந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்கள் பட்டியலை முதல் கட்டமாக அக்கட்சி வெளியிட்டுள்ளது

வகையில், 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளன. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட நிலையில், வேட்பாளர் பட்டியல் எப்போது வேண்டுமனாலும் வெளியாகும் என்று அண்ணாமலை இன்று கூறியிருந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்கள் பட்டியலை முதல் கட்டமாக அக்கட்சி வெளியிட்டுள்ளது

Also Read – பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

அதன் விவரம்:

கோவை- அண்ணாமலை
தென் சென்னை: தமிழிசை சவுந்தரராஜன்
நெல்லை: நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி: பொன்.ராதாகிருஷ்ணன்
மத்திய சென்னை: மனோஜ் பி செல்வம்
கிருஷ்ணகிரி: நரசிம்மன்
நீலகிரி (தனி): எல் முருகன்
பெரம்பலூர்: பாரிவேந்தர் (ஐ.ஜே.கே)
வேலூர்: ஏசி சண்முகம் ( புதிய நீதிக்கட்சி -தாமரை சின்னத்தில் போட்டி)நயினார் நாகேந்திரன் முதலில் தூத்துக்குடி தொகுதி என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அது நெல்லை தொகுதி என்று மாற்றப்பட்டது. தி.மு.க கூட்டணியில் நெல்லை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.கவில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுகிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *