நாடாளுமன்ற தேர்தல்: பாஜக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
1 min read
Parliamentary Elections: Announcement of constituencies contested by BJP alliance parties
21.3.2024
தமிழகத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில், பா.ம.க 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகள், டி.டி.வி தினகரனுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பா.ம.க. காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில், பா.ம.க 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகள், டி.டி.வி தினகரனுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அ.ம.மு.க. திருச்சி, தேனி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மேலும், பா.ஜ.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய நீதி கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் சிவகங்கை தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான சட்ட போராட்டம் தொடர்கிறது. தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க ஒரு தொகுதியில் மட்டும் நின்று போட்டியிடுகிறேன். களத்தில் நின்று வென்று காட்ட முடிவெடுத்துள்ளேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு முழு ஆதரவு அளிக்கிறோம். நிறைய தொகுதிகள் கொடுக்க முன்வந்தும் இரட்டை இலை சின்னம் இல்லாததால் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம்.