ஈஸ்டர் பண்டிகை: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
1 min readEaster: Greetings from President, Prime Minister
31.3.2024
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது கிறிஸ்தவ மக்களின் இறைநம்பிக்கை ஆகும். இதன் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;-
“நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு ஈஸ்டர் வாழ்த்துக்கள்! இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் இந்த புனிதமான திருநாள், அன்பு, நம்பிக்கை மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தின் உணர்வை ஊக்குவிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நம்மை அமைதியின் பாதையில் கொண்டு செல்லட்டும்.”
இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-
“புதுப்பித்தலும், நல்லவற்றை எதிர்நோக்கிய நம்பிக்கையும் எல்லா இடங்களிலும் எதிரொலிக்கும் என்று நம்புகிறோம். ஒற்றுமையையும் அமைதியையும் வளர்க்கும் வகையில் இந்த நாள் நம் அனைவரும் ஒன்றுசேர்வதற்கு ஊக்கமளிக்கட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சியான ஈஸ்டர் வாழ்த்துக்கள்..இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.