தென்காசியில் பறக்கும் படையினர் ரூ.94,000ஐ பறிமுதல் செய்தனர்
1 min read
Flying Squad seized Rs 94,000 in Tenkasi
2.4.2024
தென்காசி பகுதியில் கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் பா.கண்ணன் தலைமையில் செயல்பட்டு வரும் பறக்கும் படையினர் இன்று அதிகாலையில் அந்த வழியாகச் சென்ற மகேந்திரா வேனை வழிமறித்து உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 94 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
தென்காசி பகுதியில் கடையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பா.கண்ணன் தலைமையில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி, தலைமை காவலர் முருகேசன், மற்றும் காவலர்கள் பிரதாப் அயன்ராஜ் ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் தென்காசி பகுதிகளில் செல்லும் வாகனங்களை வழிமறித்து அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று அதிகாலை 06 மணியளவில் தென்காசி இசக்கி மஹால் அருகே பகுதியில் சோதனை நடத்திய போது அந்த வழியாக சென்ற மகேந்திரா வேனை வழிமறித்து சோதனை செய்தனர.
அப்போது அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 94 ஆயிரம் ரூபாய் இருப்பதை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர் அம்பாசமுத்திரம் பகுதியைச் சார்ந்த கே. இப்ராஹிம் என்பதும் அவர் கடையநல்லூர் சென்று கொண்டிருப்பதும் தெரிய வந்தது. ஆனால் தேர்தல் விதிமுறைகளின் படி அந்தப் பணத்துக்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரி பா.கண்ணன் பறிமுதல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 94 ஆயிரத்தை தென்காசி தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் ஏ.முருகையா னவிடம் முறைப்படி ஒப்படைத்தார்.