பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை
1 min readProfessor Nirmala Devi jailed for 10 years
30.4.2024
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி.
கடந்த 2018ம் ஆண்டு கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தாக நிர்மலாதேவி பேசிய ஆடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவியது.
இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் நிர்மலா தேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவித்தனர்
இதற்கிடையே, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய புகாரில், நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, சிபிசிஐடி எஸ்.பி.ராஜேஸ்வரி தலைமையில் விசாரணை நடைபெற்றது.
இதுதொடர்பாக சுமார் 1,160 பக்க குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மதுரை காமராஜன் பல்கலைகழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பேராசிரியை நிர்மலா குற்றவாளி என தீர்ப்பு அளித்த நிலையில் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் தெரிவித்திருந்தது..
இந்நிலையில், நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2.42 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.