தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
1 min read
Yellow warning for heavy rain for 5 days in Tamil Nadu
11.5.2024
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எந்த பகுதிக்கும் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மராட்டியம், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சண்டிகார், டெல்லி, அரியானா, கிழக்கு உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்றும் நாளையும் புழுதி புயலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.