August 10, 2026

Seithi Saral

Tamil News Channel

அயோத்தி ராமர் கோயில் இருக்கும் தொகுதியில் பாஜக தோல்வி- சமாஜ்வாதி வெற்றி

1 min read

Samajwadi victory in Faizabad constituency where Ayodhya Ram Temple is located

4/5/2024
உ.பி.,யில் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் பா.ஜ.க.வுக்கு பலமான ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி வெற்றி பெற உள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு ராமர் கோயில் கட்டப்பட்டது. இதன் பிரான பிரதிஷ்டை விழா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. மக்களின் பல ஆண்டு கோரிக்கையான ராமர் கோயில் கனவு நிறைவேறியதால் பா.ஜ.க.விற்கு ஆதரவு பெருகியது. இது இந்த பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வெளியான தேர்தல் முடிவில், உ.பி.,யில் பாதிக்கும் மேலான தொகுதியில் பா.ஜ.க. தோல்வியடைந்தது.
அதாவது அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் லல்லு சிங் தோல்வி அடைந்தார். அந்த தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 5,54,289 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *