தமிழிசையை அண்ணாமலை சந்தித்தார்
1 min read
Annamalai met Tamilisai
14.5.2024
முன்னாள் ஆளுநர் தமிழிசையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
சந்திப்பின்போது, பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை- அண்ணாமலை விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, தமிழிசை- அண்ணாமலை இடையே கருத்து வேறுபாடு என தகவல்கள் பரவி வந்தன. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழிசையை அண்ணாமலை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது சந்திப்பு தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,” இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், தமிழக பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசை அவர்கள் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது” என்றார்.