தென்காசியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
1 min read
Post Graduate Teachers Association protest in Tenkasi
15.5.2024
தென்காசியில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.ன நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
தென்காசி முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர் சு.காளிராஜ், தலைமை தாங்கினார் .மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெ.ஸ்டெல்லா தேவி, மாநிலத் துணைத் தலைவர் கலைச் செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுயம்புலிங்கம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டச் செயலாளர் சௌ. முத்துக்குமார். அனைவரையும் வரவேற்று பேசினார்.
செங்கோட்டை அரசு மகளிர் மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியை தமிழ்வாணியின் ஆசிரியர், மாணவர் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட, மாநிலப் பள்ளிக் கல்வித் துறையை வலியுறுத்தி, உடனடி நடவடிக்கை வேண்டுகிறோம்.
சிபிஎஸ் ரத்து, இஎல்.ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பழைய முறையில் நடைமுறைப் படுத்த வேண்டும். 2009க்குப் பின்பு பணியேற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய பேரிழப்பான ஊதிய முரண்பாட்டைச் சரி செய்திட வேண்டும். புதிய ஊதியக் குழுவில் முதுகலை ஆசிரியருக்கு ஊதிய விகிதத்தில் உரிய அங்கீகாரத்தை வழங்கிட வேண்டும்.
மேல்நிலைப் பள்ளித் தலைமை யாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தி விட்டு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திடுவதை ஆண்டுதோறும் உறுதி செய்திட வேண்டும். கலந்தாய்வு விதிமுறைகளில் உபரி பணியிட மாறுதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை, மாவட்டக் கலந்தாய்வை ஆஃப் லைனில் நடத்திடவும், வெளிமாவட்டக் கலந்தாய்வில் உள்மாவட்டக் காலியிடங்களைக் காட்டவும், வலியுறுத்துகிறோம்.
முதுகலை ஆசிரியர்கள் உயர் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெறுவதில் பழைய நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்..ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டத்தின் நிறுவனங்களைக் கண்டிப்பதோடு, முழுமையாகக் கட்டணமில்லா சிகிச்சையை அளிக்க வலியுறுத்துகிறோம்.
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைக்கும் அனைத்து உரிமைகளும் நலத்திட்டங்களும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் முழுமையாகக் கற்றல் கற்பித்தல் பணிகளில் மட்டுமே ஈடுபடுத்தப்பட வேண்டும். நலத்திட்டங்கள், சான்றிதழ்கள், புள்ளிவிபரங்கள், EMIS entry மற்றும் பிறபணிகளை அலுவலகப் பணியாளர்கள் உதவியுடன் தலைமையாசிரி யர்களே மேற்கொள்ள வேண்டும்.
சிறப்பு வகுப்புகள், விடுமுறை நாட்களில் வகுப்புகள் விடுமுறை நாட்களில் ஆசிரியர்களைப் பள்ளிக்கு வரக் கோரும் தலைமையாசிரியர்கள் அடிப்படை விதிகளைத் தெளிவாகப் புரிந்து ஈடுசெய்விடுப்பு அனுமதிக்க வில்லையெனில் விடுமுறை நாட்களில் பணிக்கு வர இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.புளியங்குடி அரசு உதவிபெறும் மேனிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை திருமதி. நிர்மல் ஷோபனா அவர்களின் அநீதியான தற்காலிகப் பணி நீக்கம் உடனடியாக ரத்துசெய்யப்பட வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் முருகையா, தோழமை சங்கங்களின் நிர்வாகிகள் ஆறுமுக நயினார், சண்முகசுந்தரம், டி.செல்வக்குமார், க.பிச்சைக்கனி, க.சுதர்சன், கணேசன், கண்ணன், துரை, அ.பி.சதீஷ்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள். முடிவில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் திருமாறன் அனைவருக்கும் நன்றி கூறினார்.