June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

இங்கிலாந்து தேர்தலில் ரிஷி சுன்க் கட்சி தோல்வி அடையும் என கருத்துக் கணிப்பு

1 min read

Polls say Rishi Chung’s party will lose in the UK elections

இங்கிலாந்து நாட்டில் வரும் ஜூலை 4 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்து தேர்தலிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

அவரின் செயல்பாடுகள் மீதான அதிருப்தி இந்த தேர்தலில் எதிரொலிப்பதை தேர்தல் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. கடந்த ஜூன் 12 முதல் 14 வரை சவந்தா (Savanta) நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு சண்டே டெல்கிராப் இதழில் வெளியானது. அதில் தொழிலாளர் காட்சியைச் சேர்ந்த கெயர் ஸ்டாமருக்கு 46 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 21 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சண்டே டைம்ஸ் இதழில் வெளியயான சர்வேஷன்( SURVATION) நிறுவனம் மே31 முதல் ஜூன் 13 வரை நடத்திய கருத்துக்கணிப்பில், மொத்தம் 650 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் தொழிலாளர் கட்சி 456 இடங்களைப் பிடிக்கும்(46 சதவீதம்) என்றும், ரிஷி சுனக்கின் கன்செர்வேட்டிவ் கட்சி வெறும் 72 இடங்களைப் பிடிக்கும் (24சதவீதம் ) எனவும் தெரியவந்துள்ளது. கடந்த காலங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 200 இடங்கள் வெற்றி பெற்றிருந்ததே குறைந்த பட்ட எண்ணிக்கை என்பது கவனிக்கத்தக்கது.

சண்டே அப்சர்வர் இதழில் வெளியான ஓபினியம் (OPINIUM) நிறுவனம் ஜூன் 12 முதல் 14 வரை நடத்திய கருத்துக்கணிப்பில், தொழிலாளர் கட்சி 40 சதவீதம் இடங்களைப் பிடிக்கும் எனவும் கன்சர்வேட்டிவ் கட்சி 23சதவீதம் இடைகளைப் பிடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *