செங்கோட்டையில் வாஞ்சிநாதன் 113 வது நினைவு தினம்
1 min read
113th Anniversary of Vanchinathan at Red Fort
18.5.2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வீர வாஞ்சிநாதன் 113 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவைச் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் வீரவாஞ்சிநாதன் 113வது நினைவு நாளினை முன்னிட்டு தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர மன்ற தலைவர் ராமலட்சுமி முன்னாள் நகர் மன்ற தலைவர் எஸ் எம் ரஹீம், செங்கோட்டை நகர திமுக செயலாளரும்,செங்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவருமான ஆ.வெங்கடேசன், வாஞ்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் பி.ராமநாதன், செங்கோட்டை நகர் மன்ற உறுப்பினர்கள் மேரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, செங்கோட்டை நூலகர் கோ.இராமசாமி வீர வாஞ்சிநாதன் வாரிசு ஹரிஹர சுப்ரமணியன், வாஞ்சி கோபால கிருஷ்ணன் சுதந்திர போராட்ட தியாகி சாவடி சொக்கலிங்கம் வாரிசு சிவசங்கர ராமலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத்ங செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு
அதிமுக சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ண முரளி ( எ) குட்டியப்பா தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலர் பொய்கை சோ.மாரியப்பன், செங்கோட்டை நகர அதிமுக செயலாளர் கணேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, ஜெகன், சிறுபான்மைப் பிரிவு ஞானராஜ், ஜாகிர் உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாஞ்சி இயக்க நிறுவனத் தலைவர் பி.ராமநாதன் வாஞ்சி நாதன் சிலைக்கு மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினார். செங்கோட்டை திமுக நகரச் செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன் தலைமையில் நிர்வாகிகள் சண்முகராஜா, சங்கர் கணேஷ், சுப்பிரமணியன் ஆகி யோர் மாலை அணிவித்தனர்.
பாஜக நகரத் தலைவர் வேம்பு ராஜ் தலைமையில், அக்கட்சி யின் மாநில விவசாய அணி துணைத் தலைவர் சசிராமன் உள்ளிட்டோர் மாலை அணி வித்தனர்.
தமிழ்நாடு பிராமண சமாஜத் தின் சார்பில் மாநிலத் தலைவர் ஹரிஹர முத்து ஐயர் தலைமை யில் அமைப்பினர் மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர்.
மாநில அமைப்புச் செயலர் திண்டிவனம் குமார். மாவட் டத் தலைவர்கள் தொழிலதி பர் தென்காசி ராமன், திருநெல் வேலி சிவகுமார், மதுரை ஜெயஸ்ரீ ஸ்ரீராம், மாநில இளை ஞரணிச் செயலர் நெல்லை சினு வாசன், மாநில துணைத் தலை வர் எஸ்.எஸ்.காலனி சசிரா மன், மாநிலச் செயலர் ஸ்ரீநிவா சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.