ஆலங்குளம் அருகே பைக் மீது வேன் மோதி வாலிபர் பலி
1 min readA van collided with a bike near Alankulam and a teenager died
18.5.2024
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே பைக் மீது வேன் மோதி பைக்கில் சென்ற இளைஞர் சம்பவ இடத் திலேயே பரி தாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூர் பஞ்சாயத்து காசி யாபுரம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த லிங்கம் என்பவரது மகன் கவுதம் (வயது 25). கட்டிட தொழிலா
ளியாக வேலை பார்த்து வந்தார். அவருடன் வைத்திலிங்கபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் சத்யா (வயது 25) வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் தங்களது ஊரிலுள்ள கோயிலில் அன்னதானம் சாப்பிடுவதற்காக கவுதம், சத்யாவை அழைத்துக் கொண்டு தனது பைக்கில் வந்துள் ளார். சாப்பிட்ட பின்னர் இருவரும் பைக்கில் நல்லூர் விலக்கிலிருந்து தென்காசி நெல்லை மெயின்ரோட்டை கடந்து சென்றனர். அப்போது தூத்துக்குடியிலிருந்து குற்றாலம் அருகிலுள்ள மேலகரத்திற்கு துக்க நிகழ்ச்சியில் கலந்து விட்டு திரும்பி வந்த வேன் பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் இருவரும் தூக்கிவீசப்பட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே கவுதம் பரிதாபமாக இறந்தார். சத்யா பலத்த காயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத் துக்கு ஆலங்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், கிருஷ்ண ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று படு காயமடைந்த சத்யாவை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு முதலு தவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உயிரிழந்த கவுதமின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் தூத்துக் குடி மாவட்டம் அனந்த நம்பிகுறிச்சியைச் சேர்ந்த சின்ன சங்கசுப்பு மகன் துரைப்பாண்டி (45) என்பவரை கைது செய்து விசா ரணை நடத்தி வருகிறார். உயிரிழந்த கவுதமிற்கு கடந்த ஒன்றரை ஆண்டு சுளுக்கு முன் மகாலெட்சுமி என்பவருடன் திரும் ணம் ஆனது அவர்களுக்கு குழந்தைகள் இல்லை என் பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.