செங்கோட்டை மதுரை ரயிலில் தவறி விழுந்தவர் பலி
1 min read
Man dies after falling in Sengottai Madurai train
18.5.2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து மதுரைக்குச் சென்ற பயணிகள் ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவர் தவறி விழுந்து பலயானார் அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து மதுரை சென்ற 06664 செங்கோட்டை மதுரை பயணிகள் வண்டியில் பயணம் செய்த ஒருவர் விருதுநகருக்கும் கள்ளிக்குடி ரயில் நிலையம் இடையே வண்டியில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளார்.
ரயிலில் பயணம் செய்து தவறிவிழுந்து இறந்த நபர் யார் என்ற அடையாளம் தெரியவில்லை இறந்த நபர் அவரது கையில் சங்கரம்மாள் என பச்சை குத்தியுள்ளார் மேலும் டிஎம்கே என்றும் பச்சை குத்தி உள்ளார். அவரிடம் பயணச் சீட்டு இல்லை இறந்தவர் பற்றிய தகவல்களை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.