கிட்டாரில் ராக் இசையில் அமெரிக்கா்களை அசத்திய 10 வயது இந்திய சிறுமி
1 min readA 10-year-old Indian girl who surprised America
1.7.2024
இந்தியாவை சேர்ந்த 10 வயது கிட்டார் இசை கலைஞரான மாயா நீலகண்டன், அமெரிக்காவில், திறமைகளை வெளிப்படுத்தும் டி.வி. நிகழ்ச்சியான ‘அமெரிக்காஸ் காட் டேலண்ட்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அவர் கிட்டாரில் ராக் இசையமைத்து அமெரிக்கர்களை வியப்பில் ஆழ்த்தினர். அவரது கிட்டார் வாசிப்பு திறமை மற்றும் பாவனைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
அவர் பாடும் இசை வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு உள்ளனர். இசை பிரபலங்களும், முக்கிய பிரமுகர்களும் அவரை வாழ்த்தி கருத்து பதிவிட்டனர்.
மாயா நீலகண்டன் வீடியோவை பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
கடவுளே… மாயா நீலகண்டனுக்கு 10 வயதுதான் ஆகிறது. ஆம். சைமன். அவள் ஒரு தெய்வம் தான். தேவதைகளின் தேசத்திலிருந்து வந்திருக்கிறாள்.. நாங்கள் மாயா நீலகண்டனுக்கு தேவையானதை செய்ய தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.