கனடாவில் 4 சூரியன்கள் போல பிரகாசித்த பறக்கும் தட்டுகள்?
1 min readFlying saucers that shone like 4 suns?
1.7.2024
கனடாவின் மானிடோபா மாகாணத்தில் கார் பயணம் செய்து கொண்டிருந்த ஜஸ்டின் ஸ்டீவன்சன்(வயது 49) அவரது மனைவி டேனியல் (32), வானில் திடீர் வெளிச்சத்தை கண்டு வியப்படைந்தனர். உடனே அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இரட்டை கோளங்களாக அருகருகே நெருப்பு பிழம்பு போல பிரகாசமாக ஒளிர்ந்தது. அவை வின்னிபெக் ஆற்றின் மீது வட்டமிடுவதுபோன்று நகர்ந்தன.
அதை படம் பிடித்துக்கொண்டே பேசிய ஸ்டீவன்சன், “யே..கோவ்… நாங்கள் நிஜமாகவே சில வேற்றுக்கிரக வாசிகளை பார்க்கிறோம் என்று நினைக்கிறேன்” என்று பேசுகிறார். அப்போதே சற்று அருகில் அதேபோன்று மேலும் 2 இரட்டை கோள உருண்டைகள் ஒளிர ஆரம்பித்தன. மொத்தம் 4 சூரியன்கள் ஒளிர்வது போல இந்த காட்சிகள் தெரிந்தன.
எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான இந்த வீடியோ ஒரே நாளில் 6½ லட்சம் பேரின் பார்வைகளை ஈர்த்தது. பலரும் பறக்கும் தட்டுகள் பற்றிய கருத்துகளை பதிவிட்டனர்.