தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
1 min readChange of IAS officers in Tamil Nadu
1.7.2024
தமிழக அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்கள் அதிரடியாக இடம் மாற்றப்பட்டனர். நீர்வளம், வனத்துறை செயலர்கள் உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு ஊரக வளர்ச்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வி துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா, இந்து சமய அறநிலையத் துறை செயலாளராக இருந்த கே.மணிவாசன் நீர் வளத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
நீர்வளத்துறை செயலராக இருந்த சந்தீப் சக்சேனா தமிழ்நாடு செய்தித்தாள் காகித தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுப்பணித் துறை செயலாளராக இருந்த பி.சந்திரமோகன், தற்போது இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சுற்றுலாத்துறை செயலாளராக நியமனம்.
கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை செயலராக இருந்த மங்கத் ராம் சர்மா புதிய பொதுப்பணித் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சாலை பிரிவு திட்டம்-2 திட்ட இயக்குனர் ஆர்.செல்வராஜ் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு கேபிள்டிவி மேலாண் இயக்குனராக இருந்த ஏ. ஜான் லூயிஸ், தற்போது தமிழக அரசின் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக நியமனம்.
வீட்டுவசதித்துறை கூடுதல் செயலர் எம்.விஜயலட்சுமி ஐஏஎஸ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நில சீர்திருத்தத்துறை ஆணையர் வெங்கடாசலம் ஐஏஎஸ், தமிழக அரசின் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் டி.என்.ஹரிஹரன் ஐஏஎஸ், நில சீர்திருத்த துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நகராட்சி நி்ர்வாகத்துறை முன்னாள் சிறப்பு செயலர் ஆர்.லில்லி ஐஏஎஸ், போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக இருந்த சாய் குமார் ஐஏஎஸ், தமிழக தொழில் முதலீட்டு கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமனம்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் சி.என்.மகேஸ்வரன், தமிழ்நாடு உப்புக்கழக மேலாண் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்தி துறை இயக்குனர் வைத்தியநாதன் ஐஏஎஸ், தமிழ்நாடு கேபிள் டிவியின் நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட இயக்குனர் டி.எஸ்.ஜவஹர் ஐஏஎஸ், சமூக சீர்திருத்த துறை செயலாளராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.