மக்களவை தலைவர் என்பவர் யாருக்கும் தலைகுனியக் கூடாது-நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேச்சு
1 min readLok Sabha Speaker should not bow to anyone – Rahul Gandhi’s speech in Parliament
1.7.2024
மக்களவைத் தலைவர் என்பவர் யாருக்கும் தலைகுனியக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் பேசினார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். ராகுல் காந்தி பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடிக்கு கை கொடுக்கும்போது மட்டும் மக்களவைத் தலைவர் தலைகுனிந்து வணக்கம் சொல்வது ஏன்? – மக்களவைத் தலைவர் என்பவர் யாருக்கும் தலைகுனியக் கூடாது.
என்னிடம் நிமிர்ந்து நின்று கைகுலுக்கும் மக்களவைத் தலைவர், மோடியிடம் தலைவணங்கி கைகுலுக்குவது ஏன்? – ஒரு எதிர்க்கட்சி தலைவராக நான் அனைத்து கட்சிகளுக்கும் பிரதிநிதி.
எதிர்க்கட்சித் தலைவருக்கென தனிப்பட்ட விருப்பங்கள் எதுவும் இல்லை. எதிர்க்கட்சிகள் உங்களுடைய எதிரிகள் அல்ல. நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்.
இவ்வாறு ராகுல் பேசினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, நாடாளுமன்றத்தின் மாண்பை உறுப்பினர்கள் காக்க வேண்டும் என்றும், ஒரு உறுப்பினர் பேசும்போது மற்றொருவர் குறுக்கிடக்கூடாது, என்றும் தெரிவித்தார்.