தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை
1 min read
Dr. Krishnaswamy’s request to implement total alcohol prohibition in Tamil Nadu
2.7.2024
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றாலத்தில் பத்திரிகை யாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறிய தாவது:-
தென்காசி பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட் டணி வைத்து 2 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளது. தேர்தல் வரும். போகும். ஆனால் எங்களது மக்கள் பணி தொய்வில்லாமல் நடக்கும். தென்காசியில் அலுவலகம் திறந்து மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை எதிர்பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. எதிர்காலத்தை எப்படி கணிப்பது, உள்ளாட்சி தேர்தல்களில் எவ்வாறு ஆயத்தமாவது, மதுவிலக்கு, கனிம வளம், மாஞ்சோலை உள்ளிட்ட பிரச்னைகளில் ஆலோசித்து தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும்.
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் களுக்கு 53 ரூபாய் சம்பளத்திலிருந்து 480 சம்பள உயர்வு கிடைக்க எங்களது போராட்டம் தான் காரணம். தற்போது காப்புக் காடு என்று கூறி அந்த மக்களை வெளியேற்ற
நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக போட் டியிடவில்லை. இதற்கு முன்பும் பிரதான எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடாத வரலாறு உள்ளது. அவர்களின் சவுகரியம் குறித்து முடிவெடுத் துள்ளனர். இதில் நாங்கள் கருத்து சொல்ல இயலாது. புதிய தமிழகம் கட்சி தீண்டாமை, வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கு எதிராக போராடி வருகிறது.
மதுபழக்கம்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாக உள்ளது. ஏழை எளிய மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை மதுக்கடைகளில் இழக்க வேண்டிய சூழல் உள்ளது. கள்ளக்குறிச்சி போன்று மதுவால் ஏற்படும் மரணங் களுக்கு பூரண மதுவிலக்கு நோக்கி செல்வது தான் தீர்வே தவிர சிபிஐ விசா ரிப்பதும் இன்டர்போல் விசாரிப்பதும் தீர்வாகாது. தமிழக அரசு பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். பூரண மது விலக்கிற்காக அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு மொத்தமுள்ள 8,373 ஏக்க ரில் 5 முதல் 10 ஏக்கர் நிலத்தையாவது குறைந்தபட்சம் 99 வருட குத்தகைக்காகவது வழங்க வேண்டும். அரசு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வில் மாற்றம் கொண்டு வர நாடாளுமன்றத்தில் தான் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். விஜய் நல்ல தலைவராக வர வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.