August 4, 2026

Seithi Saral

Tamil News Channel

பஞ்.தலைவர்கள் பதவி காலம் நீடிக்க ராகுல்காந்தி மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

1 min read

Request to Tamil Nadu Chief Minister through Rahul Gandhi to extend the tenure of Panj leaders

3.7.2024
தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் பதவி காலத்தை ஐந்தாண்டு காலம் நீடிக்க தமிழக முதல்வரிடம் வலியுறுத்த வேண்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் 9 மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவரும் 9 மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவரும், கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவருமான
டி.கே.பாண்டியன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்தக் கோரிக்கை மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

வணக்கம், தமிழகத்தில் 2019 ம் ஆண்டு 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிகாலம் 2024ல் முடிவடைகிறது. தென்காசி உட்பட 9 மாவட்டங்களுக்கு 2021ல் தேர்தல் நடைபெற்றது. அவர்களின் பதவிகாலம் 2026 வரை உள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அறிக்கையை பெறும் போது இதே தகவலை உறுதிபடுத்துகிறது. ஆனால் 2024ல் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்துவது சரிதான் ஆனால் அவர்களோடு சேர்த்து மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது என்றும், பதவி காலத்தை இரண்டு ஆண்டுகள் குறைப்பது என்பதும் எங்களுக்கு ஏற்றுகொள்ள முடியாத மணவருத்தத்தை ஏற்படுத்துகிறது.

நாங்கள் மத்திய மாநில அரசுகளின் உத்தரவை, வளர்ச்சிப் பணிகளை, மக்கள் நலத்திட்டங்களை நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை திறமையான நிர்வாகம் மூலம் செயல்பட்டு வருகிற எங்களுடைய பதவியை குறைப்பது. எங்களுக்கு மண உளைச்சளை ஏற்படுத்துகிறது.

ஆதலால் தமிழக முதல்வருக்கு எங்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று 5 வருடங்கள் (21.10.2026வரை எங்களது பதவிகாலத்தை உறுதி படுத்த வேண்டும். என்பதை வலியுறுத்தி பல கோரிக்கை மனுக்களை அனுப்பி உள்ளோம். முதல்வர் அவர்கள் கருணையுடன் எங்கள் கோரிக்கையை ஏற்று 5ஆண்டுகள் நாங்கள் செயல்பட உறுதி அளிக்கவேண்டும். என்பதை வலியுறுத்தி இன்று தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களை சார்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் 2689 நபர்கள் கவனஈர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோம்.

ஆனாலும் தமிழக முதலமைச்சர் இதுவரை எந்த உறுதியான தகவலையும் தெரிவிக்கவில்லை. எனவே இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக வின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான உங்களின் பாசம் நிறைந்த அண்ணன் மு க ஸ்டாலின் அவர்களிடம் எங்களது நியாயமான கோரிக்கையை எடுத்துக் கூறி 9 மாவட்டங்களில் உள்ள 2689 மக்கள் பிரதிநிதிகளையும் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பதவியில் நீடிக்க உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கோரிக்கை மனுவினை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் , மத்திய ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பி உள்ளதாக ஒன்பது மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் கோவிந்தப்பேரி டி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *