June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்திய பொது பட்ஜெட் 23-ந்தேதி தாக்கல்

1 min read

Central General Budget 23-dated presentation

6.7.2024
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில் 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ந்தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி மத்திய பொது பட்ஜெட் வரும் 23-ந்தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *