தென்காசியில் மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் திறப்புவிழா
1 min read
Inauguration of Manjapai Automatic Machine in Tenkasi
7.7.2024
தமிழக அரசின் தூய்மையாக இருங்கள் நலமாக இருங்கள் என்ற திட்டத்தின் கீழ் தென்காசி நகராட்சி பகுதியில் சுவாமி ஜன்னதி பஜாரில் மஞ்சப்பை விற்பனை செய்யும் தானியங்கி இயந்திரம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே..கமல் கிஷோர், தலைமை தாங்கினார்.தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், ஆகியோர் முன்னிலை வகித்தனர் தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயலட்சுமிசாமி, ராமகிருஷ்ணன் சுமதி இசக்கி ரவி, கல்பனா கங்காதரன் கார்த்திகா
சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொள்ள பொது மக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
பொதுமக்கள் 10 ரூபாய் நாணயம் அல்லது நோட்டு பயன்படுத்து வதன் மூலம் தரமான துணிப்பையினை இயந்திரத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்த்து துணி பைக்கு மக்களை மாற்றும் விதமாக தமிழக முதல்வர் அறிவித்த மீண்டும் மஞ்சப்பைத் திட்டத்தின் கீழ் இன்று இயந்திரம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டு நகராட்சி மூலம் நிர்மாணிக்கப் பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி ஸநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.
பொதுமக்கள் கடை வீதிகளுக்குச் செல்லும் போது கையில் துணிப்பையை எடுத்துச் செல்லவும், மறந்து சென்றாலும் இந்த இயந்திரத்தின் மூலம் துணி பையை பெற்றுக் கொள்ளவும், வர்த்தக பிரமுகர்கள் தங்களது வர்த்தக நிறுவனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பதன் மூலமும் சுற்றுச் சூழலை பாதுகாக்கலாம்.
மஞ்சப்பை என்பது அவமானம் அல்ல, சுற்றுச்சூழலை பாதுகாப்பவரின் அடையாளம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர திமுக நிர்வாகிகள் அ.சேங்பரீத், பாலகிருஷ்ணன் பால்ராஜ், ராம்துரை, மைதீன் பிச்சை, மாவட்ட பொறியாளர் அணி தலைவர் சே.தங்கப் பாண்டியன், முகமது ரபி வேல் அய்யப்பன், முருகேசன்,மைதீன், சன் ராஜா, சபரிமெஸ் சங்கர் முருகானந்தம், சங்கரராஜன்,
நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர் ஆறுமுகம், கணேசன் ஈஸ்வரன், சந்தோஷ்,
பொதுமக்கள், வர்த்தக பிரமுகர்கள் இதுபோன்ற நகராட்சியின் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதுடன், மனமுவந்து மஞ்சப்பை தயாரிப்பிற்கான தங்களது பங்களிப்பினையும் வழங்கிடுமாறு நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.