சிவநாடானூரில் திமுக அலுவலகம் கட்ட ரூ.50 ஆயிரம் நிதியுதவி
1 min read
Rs. 50 thousand financial support for construction of DMK office in Sivanadanur
6.7.2024
தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியம்
சிவநாடானூர் ஊராட்சி, வெண்ணியூரில் திமுக அலுவலகம் கட்டிட முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிதியினை மாவட்ட பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் வழங்கினார்.
தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம், சிவநாடானூர் ஊராட்சி வெண்ணியூரில் திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் கட்டப்படவுள்ளது. இக்கட்டிட பணிக்காக மாவட்;ட திமுக சார்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிதியினை மாவட்ட பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன், வெண்ணியூர் திமுக நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், ஒன்றிய செயலாளர் க .சீனித்துரை, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் ஏ.பி.அருள், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுரண்டை முத்துகுமார், சிவநாடானூர் ஊராட்சி நிர்வாகிகளான மாவட்ட பிரதிநிதி சமுத்திரபாண்டியன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராமர், ஒன்றிய பிரதிநிதி கதிரேசன், அவைத்தலைவர் முத்துக்காளை செயலாளர் அண்ணாதுரை, முரு கேசன், பிரபாகரன், ராமர், செல்வராஜ், தேன்மணி, தர்மர், சண்முகசுந்தரம், ராஜசேகர், கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.