June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராககடையம் மாரிகுமார் நியமனம்

1 min read

Youth Congress as State General Secretary Appointed by Kadayam Marikumar

6.7.2024
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் மாரிகுமார் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் நேற்று வெளியிட்டுள்ளார்.

மாரிகுமார் ஏற்கனவே மாணவர் காங்கிரஸ் அமைப்பில் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவர் கல்லூரி பயிலும் காலங்களில் கல்லூரி மாணவர் தலைவர் ஆகவும், அண்ணா பல்கலைக்கழக மாணவர் சங்க கன்வினராகவும் இருந்துள்ளார். இந்திய தேசிய மாணவர் காங்கிரஸ் அமைப்பில் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் ஆந்திர பிரதேச பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்

தென்காசி மாவட்டத்தில் மக்கள் உரிமைக்காக பல போராட்டங்களை முன் நின்று நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக கவர்னர் ஆர் என் ரவி தென்காசி மாவட்டம் வந்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயற்சி செய்து கைதானது குறிப்பிடத்தக்கது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கடையம் மாரி குமாருக்கு இந்திய தேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக நியமனம் செய்து அதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட மாரி குமாருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, அகில இந்திய பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் செல்லக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைப்பு பொதுச் செயலாளர் ராம்மோகன், இளைஞர் காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் லெனின் பிரசாத், திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாபன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன், தமிழ்நாடு காங்கிரஸ் ஆராய்ச்சி பிரிவு தலைவர் மாணிக்கவாசகம், பகுஜன் சமாஜ் கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *