ஜுலை 10 ல் பழைய குற்றாலம் வாகன நுழைவு கட்டண உரிமை ஏலம்
1 min read
10th July Old Courtroom Vehicle Entry Fee License Auction
6.7.2024
தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியம், ஆயிரப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய குற்றாலம் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்யும் உரிமம் மற்றும் சாலையோர கடைகள் குத்தகை, ஒப்பந்தப்புள்ளி கோரல் மற்றும் பொது ஏலம் 10.07.2024 புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இது பற்றி ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் தி. சுடலையாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி ஊராட்சி ஒன்றியம், ஆயிரப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய குற்றாலம் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்யும் உரிமம் மற்றும் சாலையோர கடைகள் குத்தகைக்கான குறுகிய கால ஒப்பந்த புள்ளி மற்றும் பொது ஏலம் 10.07.2024 புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சித் தலைவரால் நியமனம் செய்யப்பட்ட அலுவலர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
மேற்படி ஏலத்திற்கான வைப்புத்தொகை காலை 10:00 மணி முதல் 11 மணி வரை பெறப்படும் 11.10 மணி முதல் 11.40 மணி வரை மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு பின்னர் காலை 11:45 மணி அளவில் பகிரங்க ஏலம் நடைபெறும்.
இதில் கலந்து கொள்பவர்கள் வாகன நிறுத்த கட்டணத்திற்கு ரூபாய் 10 லட்சமும், சாலையோர கடைகளுக்கான குத்தகைக்கு ரூபாய் 10 ஆயிரமும் முன்வைப்புத் தொகையாக கட்ட வேண்டும் 01.07.2024 முதல் 30.06.2025 வரை மட்டும் குத்தகை காலமாக கருதப் படும்.
ஜி எஸ் டி பதிவு எண் உள்ளவர்கள் மட்டுமே இந்த ஏலத்தில் கலந்து கொள்ள இயலும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் ஆதார் மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்த புள்ளி திறப்பு மற்றும் ஏலம் மாவட்ட ஆட்சித் தலைவரால் நியமிக்கப்பட்ட அலுவலர் முன்னிலையில் நடைபெறும். மூடிமுத்திரையிடப்பட்ட ஒப்பந்த புள்ளி மற்றும் பொது ஏலம் இதில் கூடுதலாக ஏலம் கோரும் நபருக்கு அரசு சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஏலம் ஜாரி செய்யப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட முன்வைப்புத் தொகையினை மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்த புள்ளிக்கு தனியாகவும் காலை 11 மணிக்குள் தென்காசி பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றத்தக்க வகையில் தலைவர் ஊராட்சி ஆயிரப்பேரி என்ற முகவரிக்கு வங்கி வரை வோலையாக சமர்ப்பிக்க வேண்டும். வைப்புத் தொகை செலுத்தியவர்கள் மட்டுமே ஒப்பந்த புள்ளியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வைப்புத் தொகை செலுத்தாதவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஏலம் எடுத்தவர் ஏலம் முடிந்தவுடன் ஒரே தவணையில் முழு தொகையையும் வங்கி வரைவோலையாக செலுத்திட வேண்டும் அதற்குரிய ஜிஎஸ்டி யையும் செலுத்தி அதற்குரிய ரசீதை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு ஏலத் தொகையினை செலுத்த தவறும் பட்சத்தில் வைப்புத்தொகை முழுவதும் பறிமுதல் செய்யப்படும். வைப்புத் தொகை திரும்ப வழங்கப்பட மாட்டாது.
கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்பவருக்கு ஊராட்சி மன்ற தீர்மானம் மூலம் அங்கீகாரம் பெற்ற பின்பு ஏலம் ஜாரி செய்யப்படும். ஏலம் எடுத்த நபர் உரிமத்தை பிரிதொரு நபருக்கு மாற்றம் செய்யவோ, மறு குத்தகைக்கு விடவோ அனுமதிக்கப்பட மாட்டாது. ஏலம் எடுத்த நபர் ஊராட்சி சொத்துகளுக்கு அல்லது அரசு துறை சார்ந்த பெற சொத்துக்களுக்கும் பாதிப்பு அல்லது சேதம் ஏற்படாமல் பாதுகாத்து வரவேண்டும்.
அவ்வாறு பாதிப்பு அல்லது சேதம் அடைந்தால் ஏலதாரரே முழு பொறுப்பு ஆவார். ஊராட்சி அரசு சொத்துகளுக்கான சேதாரம் ஏதும் கண்டறியப்பட்டால் ஒப்பந்தக்காரர் வைப்பு தொகையிலிருந்து சேதாரத்திற்கான தொகை ஈடு செய்யப்படும்.
ஏலத்தொகை மற்றும் காப்புத்தொகை முழுவதையும் செலுத்திய பின்பு ஏலம் யார் செய்த உத்தரவு பெற்ற பின்னர் அவர்களது சொந்தச் செலவில் உடன்படிக்கை ரூபாய் 100 மதிப்புள்ள முத்திரைத்தாளில் எழுதி உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏல நிபந்தனைகளை மாற்றவோ ஏலத்தினை பிரிதொறு தேதிக்கு மாற்றி வைக்கவும் ரத்து செய்யவும் மேலும் பொது நலன் கருதி ஏலம் ஜாரி செய்த பின்பு ஏல உரிமையை எந்த நேரமும் எந்தவித முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்யவும். மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது அவரால் நியமனம் செய்யப்பட்ட அலுவலருக்கு முழு அதிகாரம் உண்டு. உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் வரும் 10.07.2024 காலை 10 மணிக்கு ஏலம் நடைபெற உள்ளதாக ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் தி.சுடலையாண்டி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.