June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 31 நாட்களில் 131 பேர் கொலை: சீமான் பேச்சு

1 min read

131 people killed in 31 days in Tamil Nadu: Seaman talks

7.7.2024
தமிழகத்தில் 31 நாட்களில் 131 படுகொலைகள் நடைபெற்றுள்ளன என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய, பிறகு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
ஆம்ஸ்ட்ராங் மறைவு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு. தமிழகத்தில் 31 நாட்களில் 131 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. தேசிய கட்சி மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை.
சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. இப்படி ஒரு சூழல் வரும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.சரணடைந்தவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படி நம்புவது?. நானும் ஆம்ஸ்ட்ராங்கும் ஒரே நோக்கத்தை கொண்டவர்கள். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சி.பி.ஐ., விசாரணை அவசியம் இல்லை. இவ்வாறு சீமான் பேசினார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *