தென்காசியில் உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி
1 min read
Higher Education Mentoring Program in Tenkas
7.7.2024
தென்காசி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூகநலத்துறை இணைந்து நடத்தும் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலும் வழிகாட்டும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி இசி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (06.07.2024) பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூகநலத்துறை இணைந்து நடத்தும் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலும் வழிகாட்டும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பேசியதாவது:-
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலமாக செயல்படுத்தப் படும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் முக்கிய நோக்கமானது. பாலின பாகுபாடு அடிப்படையில் குழந்தைகளின் பாலினம் அறிந்து கொள்ளப் படுவதை தடுத்தல், பெண் குழந்தைகள் உயிர் வாழ்வதையும். அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தல் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியினை மேம்படுத்துதல் ஆகும். தமிழ்நாடு அரசானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் உயர்கல்வி பயில உதவிடும் வகையில் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் ரூ.1000/- வழங்கி ஊக்குவித்து வருகிறது.
மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் சத்தான ஊட்டச்சத்துடைய உணவுகளை உண்டு இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயில வேண்டும் என்பதற்காக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் உயர்கல்வி பயிலவும் மற்றும் பொருளாதார முறையில் முன்னேற்றம் அடையவும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையுடன் காவல்துறை, கல்வித்துறை, சுகாதாரத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான வழிமுறைகள் பற்றியும், உயர் கல்வியில் உள்ள பல்வேறு துறைகள் பற்றியும், அதனால் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் பற்றியும் இன்றைய உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அனைத்து மாணவிகளும் இப்பயிற்சியினை நன்கு கற்று இன்றைய நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானி திட்ட இயக்குநர் ஆதித்யா எல்1 நிகார்ஷாஜியிடம் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்து
தங்களுக்கு விருப்பமான கல்வி பயின்று எதிர்காலத்தில் உயரிய வேலைவாய்ப்பு பெற்று வெற்றி அடைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பெண்கள் முன்னேற்றத் திற்கான அடையாளம் மாவட்ட அறிவியல் மற்றும் என்ற விருதினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். நிகார் ஷாஜி. (திட்ட இயக்குநர். ஆதித்யா எல் 1) அவர்களுக்கு வழங்கினார்.நிகார் ஷாஜி திட்ட இயக்குநர், ஆதித்யா எல் 1 முன்னாள் அரசு பள்ளி மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்கோட்டை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
போட்டித் தேர்வின் முக்கியத்துவம் குறித்து சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.கவிதா மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி.மதிவதனா, மாவட்ட பதிவாளர் திருமதி.அனுஸ்விகா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் திருமதி.பானுபிரியா ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்தார்கள். உயர்கல்வியை தேர்ந்தெடுப்பது எப்படி என மரு.மகாலெஷ்மி (உதவி பேராசிரியர். மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி) அவர்கள் விளக்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் 700 மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் முத்தையா, மாவட்ட கல்வி அலுவலர் தேவிகாராணி, மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.