23-ந் தேதி முதல் செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம் வரை மட்டுமே இயங்கும்
1 min readFrom 23rd Sengottai-Thambaram Express train will run only till Villupuram
13.7.2024
சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் இன்டர்லாக் சிக்னல் பணிகள் காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து புறப்படும் பல ரெயில்கள் பகுதி தூரம் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, நெல்லை வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்படும் (வண்டி எண் 20683 / 20684) தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் அதிவிரைவு ரெயில் வருகிற 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் 11-ந்தேதி வரை விழுப்புரம் வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ரெயில்கள் தாமதமாக இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை சென்னைக்கு ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் முன் கூட்டியே தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேபோல் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டுடன் நின்று விடும். அவை தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூருக்கு செல்லாது என தென்னக ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.