July 11, 2025

Seithi Saral

Tamil News Channel

இரணியல் அரண்மனை ரூ.4.85 கோடியில் புனரமைப்பு பணி

1 min read

Iranial Palace renovation work at Rs.4.85 crores

19/7/2024
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் இரணியல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (19.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இதுபற்றி அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் கேரளா மாநிலத்துடன் இணைந்து இருந்த போது இரணியல் வட்டம் தலைநகராக இருந்ததோடு திருவிதாங்கூர் திவான் நாகம்அய்யா இரணியல் வேணாட்டரசர்களின் தலைமை நகரமாக இருந்தது. பத்மநாபபுரம் தலைநகரான பின்னர் இரணியல் இரண்டாம் நகரமாக இருந்தது. இரணியல் அரண்மனை மார்த்தாண்டேஸ்வரர் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இக்கோவில் வஞ்சி மார்த்தாண்ட மன்னரால் கட்டப்பட்டதாகும்.
கி.பி.12-ஆம் நூற்றாண்டில் இருந்து இப்பகுதியினை அரசாண்ட வேணாட்டரசர்களின் முக்கிய அரண்மனையாக இளவரசர் முதலான வேணாட்டரசர்களும் அரச குடும்பத்தினரும் இரணியல் அரண்மனையில் வாழ்ந்து வந்தனர். பத்மநாபபுரம் அரண்மனைக்கு முன்னரே பிரமாண்டமாக இரு அடுக்காக கட்டப்பட்ட அரண்மனையாகும்.
இரணியல் அரண்மனையில் அரசர் சயனிப்பதற்குரிய அறை, அதிகாரிகளும் பிறரும் தங்குமிடம் என்றும் இரு பகுதிகளைக் கொண்டது. 2.5 ஏக்கர் பரப்பில் அமைந்த வளாகத்தில் இக்கட்டிடங்கள் உள்ளன. பெரிய அரண்மனைக் கட்டிடம் அருகே அரசக்குடும்பத்தினர் குளிக்க ஒரு சிறு குளமும் உண்டு.
பெரிய அரண்மனையின் முன்வாசல் வேலைப்பாடுடையது. இதன் கல்தூணில் செண்டேந்திய சாஸ்தாவின் சிற்பம் உள்ளது. இரு தலையுடைய கண்ட பேரண்ட பட்சி ஒன்று யானைகளை கால்களில் தூக்கிச் செல்லும் சிற்பமும் உள்ளது. அரண்மனை உள்பகுதியில்
நாலுகட்டு வீடு, நடுவில் சிறு முற்றமும் நான்கு சுற்றுகட்டுகளும், பக்கவாட்டில் மூன்று அறைகளும் சமையலறையும் கொண்டது. சுற்றுக்கட்டு பகுதியில் மேல் மாடி உண்டு. மாடியில் ஓரத்தில் சிறு கழிவறை உள்ளது இப்பகுதி பெண்களின் தங்குமிடமாக இருந்திருக்கலாம்.
மொத்தம் அரண்மனைச் சுற்றிலும் தாழ்வாரம் உண்டு. சுற்றுக்கட்டு பகுதிகளில் எண்பட்டைக் கொண்ட கல் தூண்கள் உள்ளன. மேல் கூரை ஓடுவேய்ந்தது. இந்த ஓட்டின் நீளம் அகலமும் கட்டுமான செங்கலின் அமைப்பும் இதன் பழமையை பறைசாற்றுகின்றன.
கன்னியாகுமரி மாவட்ட தாய் தமிழ்நாட்டுடன் இணைந்த நாள் முதல் இரணியல் அரண்மனை பராமரிப்பின்றி காணப்பட்டது. இரணியல் அரண்மனையை பழைமை மாறாமல் புனரமைத்து தர வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று 2013-2014-ஆம் ஆண்டில் சட்டப்பேரவை விதி 110-கீழ்

17,18 –ஆம் நூற்றாண்டு வேநாட்டு மன்னர்களின் இருப்பிடம் தமிழ்நாடு அரசு மானியம் நிதியின்
கீழ் ரூ.3.85 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 13.12.2019 அன்று பணி ஆணை வழங்கப்பட்டு 30.01.2020 அன்று
பூமி பூஜை நடைபெற்றது. மேலும், 12.10.2020 அன்று ஒப்பந்த உடன்படிக்கை மேற்கொண்டு
12.12.2020 அன்று பணி துவங்கப்பட்டது. இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகள் எழுபது
சதவீதம் (70%) நிறைவடைந்ததை தொடர்ந்து மீதம் முப்பது சதவீதம்(30%) பணிகள் விரைவாக
மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இரணியல் அரண்மனை கொண்டுவரப்படும்.
இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.