தென்காசியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
1 min read
District level sports tournament in Tenkasi
22.7.2024
தென்காசி மாவட்ட அட்யா பட்யா அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற முதல் மாவட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ கிருஷ்ணமுரளி(எ) குட்டியப்பா பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
தென்காசி மாவட்டம் இலத்தூர் ஸ்ரீ ராம் வித்யாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அட்யா பட்யா அசோசியேஷன் சார்பில் முதல் மாவட்ட விளையாட்டு போட்டி சங்கத் தலைவர் சாந்தசீலன் தலைமை தாங்கினார்.மாவட்ட துணை செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் குத்தால பெருமாள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
பெண்கள் பிரிவு போட்டியினை ஸ்ரீ ராம் வித்யாலயா பள்ளி தாளாளர் சத்யநாராயணன் ரோட்டரி கிளப் சங்க உறுப்பினர் வேலாயுதம் ஆகியோர் துவக்கி வைத்தனர் ஆண்கள் பிரிவு போட்டியினை குடியிருப்பு குமார், மகேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்
இந்தப் போட்டியில் இலத்தூர் ஸ்ரீராம் வித்யாலயா, ஆழ்வார்குறிச்சி குட் ஷெப்பர்ட் பள்ளி, இடைகால் அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 14 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.மேலும் பல கட்டங்களாக நடைபெற்ற போட்டியில் பெண்கள் பிரிவில் இடைகால் அரசு உயர்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது.
இலத்தூர் ஸ்ரீராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், ஆழ்வார்குறிச்சி குட் ஷெப்பர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மூன்றாவது இடமும் பிடித்தனர்.ஆண்கள் பிரிவில் ஆழ்வார்குறிச்சி குட் ஷெப்பர்ட் பள்ளி முதல் இடமும் ஸ்ரீராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றனர்,
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான
செ .கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, அச்சன்புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் டாக்டர் சுசீகரன், தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் எஸ் எம் மணி, ரோட்டரி சங்க தலைவர் சுப்பையா, திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முனைவர் சிவ ஆனந்த், அதிமுக வடக்கு மாவட்ட துணை செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன், அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் செயலாளர் கந்தசாமி பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்
செ.கிருஷ்ணமுரளி (எ)குட்டியப்பா பரிசு கோப்பை, சான்றிதழ் மெடல் வழங்கி பாராட்டினார்,
வெற்றி பெற்ற 12 மாணவர்கள் மற்றும் 12 மாணவிகள் என மொத்தம் 24 பேர்கள் தேர்வு செய்யப்ட்டு அடுத்த மாதம் முதல் வாரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில போட்டியில் தென்காசி மாவட்டம் சார்பில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியினை அட்யா பட்யா மாநில துணை தலைவர் ஜெயராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷைனி, நடுவர்களாக ஆதிவிஷ்ணு குமார் ஜெனிட்ரோ ஜெயபிரகாஷ் கணேஷ் ஜாய்சன் விவேகானந்தன் ஆகியோர் செயல்பட்டனர், விளையாட்டு பயிற்சியாளர்கள் பொன்னம்மாள், பேச்சிமுத்து, பிரதீப் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் டாக்டர் வைரமுத்து அனைவருக்கும் நன்றி கூறினார்.