தென்காசியில் ஆடித்தபசு திருவிழா
1 min read
adithabasu festival in Tenkasi
22.7.2024
தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோயிலை சார்ந்த மேலச் சங்கரன்கோயில் சங்கரதாராயண சுவாமி – கோமதி அம்பாள் கோயில் ஆடித்த பசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தென்காசி மேலச்சங்கரன் கோயிலில் ஆடித்தபசு திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக நடத்துவது வழக் கம். இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா கடந்த 1ம் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியை கோயில் அர்ச்சகர் கோமதி நடராஜ பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ஏற்றி வைத்தனர்.
இந்த விழாவில் தின மும் காலை மாலை வேளைகளில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்து வந்தது. தினமும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று மாலையில் சுவாமி. அம்பாள் எழுந்தருளினர், தொடர்ந்து மூன்று முறை மாலை மற்றும் வஸ்திரம் மாற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சங்கர நாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் ஆடித்தபசு காட்சி கொடுத்கும் வைபவம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
நாளை (23ம் தேதி) மாலை 6 மணிக்கு மேல் கட்டளை, இரவு 8 மணிக்கு மேல் பைரவர் பூஜை நடக்கி றது இதேபோல் தென்காசி கீழச்சங்கரன் கோவிலிலும் ஆடி தபசு திருவிழாவில் நேற்று மாலை மட்டப்பா தெருவில் வைத்து ஆடிதபசு காட்சி நடந்தது. அங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதில் கட்டளைதாரர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முருகன், கோவில் மணியம் மூர்த்தி, திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையாபாண்டியன் அறங்காவலர்கள் இசக்கிரவி பால்ராஜ், ஜெயலட்சுமி சுமதி மோகன் ராஜ், அதிமுக நகர செயலாளர் சுடலை, மாரிமுத்து, சுப்புராஜ் கசமுத்து, முத் துக்குமாரசாமி, துப்பாக்கி பாண்டியன். கூட்டுறவு சங்கர், பாஜக மாவட்ட துணைத்தலைவர் முத்துக் குமார், நகர தலைவர் மந் திரமூர்த்தி, கவுன்சிலர்கள் சங்கரசுப்பிரமணியன் லெட் சுமண பெருமான் கருப்ப சாமி, ராஜ்குமார். இந்து முன்னணி இசக்கிமுந்து காங்கிரஸ் வட்டாரத் தலைவர்
குற்றாலம் பெருமாள் நகர தலைவர் மாடசாமி ஜோதிடர், பொருளாளர் சஸ்வரன் கவுன்சிலர்கள் சுப் பிரமணியன், பூமாதேவி மதிமுக மாவட்ட அவை தலை வர் என்.வெங்கடேஸ்வரன், தென்காசி நகர மதிமுக செயலாளர் ஜி.கார்த்திக், கவுன்சிலர் வசந்தி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர் பங்கேற்றனர். முன்னதாக மேலச்சங்கரன் கோலில் நேற்று அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு நேர்த் திக்கடன் செலுத்தினர்.
தென்காசி டிஎஸ்பி நாகசங்கர் இன்ஸ்பெக்டர்கள் ஜான் பிரிட்டோ பாலமுருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.