December 8, 2024

Seithi Saral

Tamil News Channel

தெனாகாசியில் அட்யா பட்யா விளையாட்டு நடுவர்கள் பயிற்சி முகாம்

1 min read

Adya Padya Sports Referees Training Camp at Tenagasi

29.7.2024
தென்காசி அருகே உள்ள இலத்தூர் ஸ்ரீ ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த அட்யா பட்யா விளையாட்டு நடுவர்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கிளியான் தட்டு விளையாட்டு, ’அட்யா பட்யா’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
கோ-கோ மற்றும் கபடி கலந்த இந்த விளையாட்டை மாணவ, மாணவிகள் ஆர்வமாக விளையாடி வருகின்ற நிலையில் இந்த விளையாட்டில் சர்வதேச அளவில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அட்யா பட்யா அசோசியேஷன் சார்பில் 3 வது நடுவர் பயிற்சி முகாம் தென்காசி அருகே உள்ள இலத்தூர் ஸ்ரீ ராம் வித்யாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட தலைவர் சாந்தசீலன் தலைமை தாங்கினார்.மாவட்ட துணை செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார், மாவட்ட பொருளாளர் குத்தால பெருமாள் அனைவரையும் வரவேற்று பேசினார், இந்த நிகழ்ச்சியை தென்காசி கிழக்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் செல்வகுமார், தென்காசி நகர்மன்ற அதிமுக உறுப்பினர் உமாமகேஸ்வரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்,

இந்த பயிற்சி முகாமிற்கு அட்யா பட்யா மாநில தலைவர் பாலாஜி, மாநில செயலாளர் சிவசுப்பிரமணியன், துணை தலைவர் ஜெயராஜ், கெளரவ துணை தலைவர் முத்துகுமரன், இணை செயலாளர்கள் இசக்கி, செந்தாமரை கண்ணன், கெளரவ இணை செயலாளர் ஸ்ரீலட்சுமி, நிர்வாக குழு உறுப்பினர்கள் சர்வேஸ்வரன், ஷைனி ஆகியோர் சென்னை, திண்டுக்கல், திருப்பூர், தர்மபுரி, திருநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுமார் 100 புதிய மற்றும் பழைய நடுவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தி தேர்வு செய்தனர், அதன் பின்னர் தேர்ச்சி பெற்ற நடுவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களான தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், திருநெல்வேலி லிட்டில் பிளவர் பள்ளி தாளாளர் அண்டஜோ செல்வகுமார், சான்றிதழ் வழங்கினர், தென்காசி நகர திமுக பொருளாளர் சேக்பரீத், நகர்மன்ற உறுப்பினர் மைதீன், மலையான் தெரு சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் இசக்கிரவி, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர், முடிவில் அட்யா பட்யா அசோசியேஷன் மாவட்ட செயலாளர் வைரமுத்து இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும், இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.