முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால் தான்: சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை
1 min readKejriwal is the main conspirator: CBI, chargesheet
29.7.2024
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ., இன்று (ஜூலை 29) டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால் தான் என சி.பி.ஐ., குற்றம் சாட்டியுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்க துறை கைது செய்தது. அமலாக்க துறை என்னை கைது செய்தது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூலை 12ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் அளித்தது.
சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கினாலும், இன்னொரு வழக்கில் அவரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது. இதனால் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. அவருக்கு கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ., இன்று (ஜூலை 29) டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகையில், ‛‛ இந்த வழக்கில் முக்கிய சதிகாரரே கெஜ்ரிவால் தான். அவர் டில்லி மதுபான கொள்கையை வகுத்து செயல்படுத்தியதற்காக பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார்.
டில்லி அரசின் அனைத்து முடிவுகளும் அவரது வழிகாட்டுதலின்படி மட்டுமே எடுக்கப்பட்டன. மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுடன் கெஜ்ரிவால் தொடர்பில் இருந்துள்ளார்” என சி.பி.ஐ., குறிப்பிட்டுள்ளது.