கொல்லம் – சென்னை எக்ஸ்பிரஸ் மின்சார ரயிலுக்கு செங்கோட்டையில் வரவேற்பு
1 min readKollam-Chennai Express electric train welcomed at Sengottai
29/7/2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று முதல் அனைத்து ரயில்களும் மின்சாரம் மூலம் இயக்கப்பட்டது. இதற்கு செங்கோட்டை வர்த்தக சங்கம், மற்றும் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் முன்னாள் நகர் மன்ற தலைவரும் வர்த்தக சங்க தலைவருமான செங்கோட்டை எஸ்.எம்.ரஹீம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தில் எல்லா ரயில் பாதைகளும் மின் சார ரயில் பாதைகளாக மாற்றப்பட்டு வரும் நிலை யில் கடந்த 1904ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையில் நிலக்கரி என்ஜினை கொண்டு துவங்கப்பட்ட செங்கோட்டை புனலூர் ரயில் பாதை மின்மய மாக்கப்பட வேண்டும் என தமிழகம் மற்றும் கேரள மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டில் கேரள மாநிலம் எடமன் மற்றும் தமிழகத்தில் பகவதிபுரம் இடையே மின் மயமாக் கும் பணிகள் துவங்கப் பட்டது.
34 கி.மீ. தூரம் மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. சோதனை ஓட்டங்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து நேற்று முதல் மின்சார இழுவையில் ரயில்கள் இயக் கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து முதன் முறையாக மின்சா ரம் மூலம் இயக்கப்பட்ட கொல்லத்திலிருந்து செங்கோட்டை வழியாக சென்னை செல்லும் (வண்டி எண்) 16101 – 16102 சென்னை -கொல் லம் எக்ஸ்பிரஸ் நேற்று மாலை 3.20 மணிக்கு செங்கோட்டை நிலை யத்துக்கு வந்தது. இந்த ரயிலுக்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங் கம் மற்றும் செங்கோட்டை, வர்த்தக சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செங் கோட்டை வர்த்தக சங்க தலைவரும் முன்னாள் நகர்மன்ற தலைவருமான செங்கோட்டை எஸ்
எம்.ரஹீம் தலைமையில் ரயில் ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி செங்கோட்டைக்கு வந்த முதல் மின்சார ரயி லுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து ரயில் பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட் டன. இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்க செயலாளர் கிருஷ்ணன், ராமன், ஹாரிஸ், செங் கோட்டை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கள் கல்யாணி, செந்தில் ஆறுமுகம், சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.