வங்காள தேசத்தில் கலவரம்: மேற்கு வங்க மக்களுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள்
1 min read
Riots in Bengal: Mamata Banerjee appeals to the people of West Bengal
5/8/2024
வங்காளதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்த சூழலில் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் தலைநகரான டாக்காவை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு அமைவதாக ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், வங்காள தேசம் கலவரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அம்மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்,
“வங்காள மக்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். யாரும் எந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. இந்த விவகாரம் இரு நாடுகளை உள்ளடக்கியது. மத்திய அரசின் அறிவுறுத்தல்களின்படி செயல்படுவோம். எந்தவிதமான வதந்திகளுக்கும் இடம் கொடுக்க வேண்டாம்” என கூறியுள்ளார்.