June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

சுதந்திர தினத்தை முன்னிட்டுஅஞ்சல் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை

1 min read

On the occasion of Independence Day Sale of National Flag at Post Offices

6.8.2024
இந்திய நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசிய கொடி விற்பனை செய்யபடுகிறது.

இதுபற்றி கோவில்பட்டி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இந்திய நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசிய கொடி விற்பனை செய்யபடுகிறது. ஒரு
தேசிய கொடியின் விலை ரூ 25 ஆகும். பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவகங்களுக்கு சென்று இதனை வாங்கிக் கொள்ளலாம்.

ஆன்லைன் மூலமாக தேசிய கொடிகள் வாங்க விரும்பும் பொதுமக்கள் https://www.epostoffice.gov.in/ என்ற இளையதளத்தில் பதிவுசெய்து தபால்காரர் மூலம் வீட்டில் இருந்தபடியே பெற்றுகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு பொதுமக்கள் 04632 221013 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது தேவையினை தெரிவிக்கலாம்

பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுதிக் கொள்ளுமாறு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ. சுரேஷ் குமார் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

One attachment
• Scanned by Gmai

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *