புத்ததேவ் பட்டாச்சார்ஜி மறைவு: முதல்-அமைச்சர் இரங்கல்
1 min readBuddhadev Bhattacharjee passes away: Prime Minister’s condolence
8.8.2024
மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல் மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்ஜி மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்
“இடதுசாரி இயக்கத்தின் முதுபெருந்தலைவரும், மேற்கு வங்க மாநில முன்னாள் முதலமைச்சருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். தனது மாநிலத்துக்கும் நாட்டுக்கும் அவர் காட்டிய மாறாத அர்ப்பணிப்பும் சேவையும் என்றும் நினைவுகூரப்படும். ஓர் உறுதியான மார்க்சியவாதியாக, சமத்துவச் சமுதாயத்தை வளர்த்தெடுக்கவும் விளிம்புநிலை மக்களின் நலனுக்காகவும் சமூகநீதிக்காகக் குரல் கொடுக்கவும் தனது வாழ்வை அவர் அர்ப்பணித்துக் கொண்டார்.
அவரது தலைமைத்துவமும், மக்கள் மீதான உறுதிப்பாடும் வருங்காலத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் இவ்வேளையில் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.