தென்காசியில் மாநில சதுரங்க போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
1 min readStudents selected for State Chess Tournament in Tenkasi
8.8.2024
தென்காசி வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி சி.எம்.எஸ் நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.இதில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மாவட்டம் மண்டலம் மற்றும் மாநில சதரங்க போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
தென்காசி வட்டார அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டிக்கு
தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் சண்முகசுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார்.வட்டாரக் கல்வி அலுவலர் இளமுருகன் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை தலைமை ஆசிரியர் இராஜதுரை அனைவரையும் வரவேற்று பேசினார்.
தென்காசி வட்டார அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் தென்காசி வட்டாரத்தைச் சார்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உட்பட 40 பள்ளிகளிலுள்ள 3 முதல் 5 ம் வகுப்புகளில் பயிலும் மாணவர் மாணவிகள் 80 பேர்கள் கலந்துக் கொண்டனர். அவர்களில் சிறப்பிடம் பெற்ற ஆகாஷ்குமார், அப்துல் ஹமீது, ஆதம், அகிலேஷ், அசிம் மெஹர் நிஷான், மாதவ் ஆகிய மாணவர்களும் சுவேதா, கஷமித்ரா, கௌசிகா, நப்பிலா,டியானி,இராஜகுமாரி ஆகிய மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.உடற்கல்வி ஆசிரியர் சாகுல் ஹமீது நன்றியுரைக் கூறினார்.
இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள், மாவட்ட, மண்டல அளவிலும் மாநில அளவிலும் நடைபெற உள்ள சதுரங்க போட்டியில் கலந்துக் கொள்வார்கள். என்று தென்காசி வட்டார கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.