சுந்தரபாண்டியபுரத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா
1 min read
Inauguration of Free Ambulance Service in Sundarabandiyapuram
16.8.2024
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சுந்தரபாண்டியபுரம் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் நிர்வாகி பி.இராஜேந்திரன் தலைமை தாங்கினார். அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் செயலாளர் ஆர்.கிறிஸ்டி மற்றும் உறுப்பினர்கள் வி.இசக்கி முத்து, அந்தோணியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை
வே.ஜெயபாலன் ஆகியோர் கலந்துகொண்டு ஆம்புலன்ஸ் சேவையினை துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர் எம் அழகு சுந்தரம், சுந்தரபாண்டியபுரம் பேரூர் திமுக செயலாளர் வே. பண்டாரம், சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் காளியம்மாள் செல்வக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுந்தரபாண்டியபுரம் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் நிர்வாகி பி.இராஜேந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.