June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் மோடியின் கவிதையை மேற்கோள் காட்டி ஆச்சரியப்படுத்திய டிரினிடாட் பிரதமர்!

1 min read

Trinidad PM surprised by quoting PM Modi’s poem!

4.7.2025
அயல்நாட்டு பயணத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தற்போது டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு சென்றுள்ளார். அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு கவாய் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி உரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் பேசிய டிரினிடாட் மற்றும் டொபாகோவின் பிரதமர் கம்லா பெர்சாத் பிஸ்ஸேசர், மோடி எழுதிய குஜராத்தி கவிதையிலிருந்து சில வரிகளை மேற்கோள் காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் எழுதிய ‘ஆங்க் ஆ தன்யா சே’ (இந்த கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை) என்ற புத்தகத்தின் கவிதையை அவர் குறிப்பிட்டார்.

“நாம் காலத்தில் பின்னோக்கி பயணிக்கும்போது, பல நினைவுகள் மீண்டும் வருகின்றன. கடினமான காலங்களில் நமக்கு ஆதரவாக நின்றவர்களை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. அந்த நினைவுகள் நமது பயணத்தின் ஒரு பகுதியாக இருக்கும்,” என்று அவர் கூறினார். இதற்கிடையே, கம்லா பெர்சாத் பிஸ்ஸேசர் பீகாரை பூர்வீகமாக கொண்டவர் என மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *