June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

1 min read

Teen gets 20 years in jail for sexual harassment of girl in Tenkasi

21.8.2024
தென்காசியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென்காசி கீழவாலிபன்பொத்தை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் கார்த்திக் (வயது 24). கொத்தனார் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 2020-ம் ஆண்டு 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர், தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று நீதிபதி சுரேஷ்குமார் (பொறுப்பு) முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார் குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக்கிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை, மற்றும் ரூபாய் .10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசுதரப்பு வழக்கறிஞர் உஷா ஆஜராகி வாதாடினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *