விஜய் கட்சி மாநாடு 23-ந் தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது
1 min readVijay party conference will be held on 23rd at Vikravandi
28.8.2024
செப்டம்பர் 23ம் தேதி கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் நடத்தப்போவது உறுதியாகி உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் மாநாட்டு வேலைகளில் தீவிரமாகியுள்ளனர்.
கட்சி ஆரம்பிப்பேன், தேர்தலில் போட்டியிடுவேன் என்று யார் யாரோ கூறியது நடக்காது போனாலும், ‘அரசியலுக்கு நிச்சயம் வருவேன்’ என்று கூறி அதை செய்தும் காட்டி உள்ளார் நடிகர் விஜய். தனது கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் வைத்து வரும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதாகவும் அறிவித்துவிட்டார்.
கட்சி பெயர் அறிவிச்சாச்சு, கொடியையும் அறிமுகப்படுத்தியாச்சு, கட்சி பாடலையும் வெளியிட்டாச்சு. கொடி விளக்கம், கட்சியின் கொள்கை உள்ளிட்ட மற்ற நோக்கங்களை அறிவிக்க மாநாடு அவசியம் என்பதால் அதற்கான பரபர வேலைகளில் நடிகர் விஜய் இறங்கி வருகிறார். அதற்குள் அவர் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார், யார் சொல்லி கட்சியை ஆரம்பித்து இருக்கிறார், சீமானுடன் கூட்டணி என்று பலர் ஹேஷ்யங்களை கூறி வருகின்றனர்.
ஏதேனும் ஒரு இடம்
இத்தகைய சூழ்நிலையில், திருச்சி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்ய விஜய் உத்தரவிட்டு இருந்ததாக கூறப்பட்டது. அங்கு இடம் அமையாத நிலையில், விக்கிரவாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது.