சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றினால் கடும் நடவடிக்கை- எஸ்.பி. எச்சரிக்கை
1 min readStrict action if passengers are loaded in cargo vehicle- S.B. warning
29.8.2024
தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று காலை விவசாய வேலைக்கு சென்ற நபர்களை ஏற்றி சென்ற லோடு ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்து தொடர்பாக விசாரணை செய்து, விபத்தில் காயமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் உரிய மருத்துவ வசதி செய்து கொடுக்க அறிவுரை வழங்கினார்.
மேலும் விபத்து தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யபட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இதேபோல் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி பயணம் செய்தாலோ, பயணிகள் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட பயணிகளை விட கூடுதல் பயணிகளை ஏற்றி பயணம் மேற்கொண்டாலோ மேற்படி வாகனம் மீது அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நேற்று தென்காசி மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றி சென்ற 41 சரக்கு வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.