இலங்கை அதிபருடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு
1 min readIndian Defense Adviser meets Sri Lankan President
31/8/2024
இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று கொழும்பு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று முன்தினம் இலங்கை சென்றார்.இந்த நிலையில் நேற்று காலை கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்த அஜித் தோவல் அவருடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருநாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர். இலங்கையில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஜித் தோவலின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.